-
எந்தப் பொருள் வாங்கினாலும், ரொம்ப நாளைக்கு அதைச் சுத்தி இருக்கற
ஜவ்வுபேப்பரைக் கிழிக்கவே
மாட்டீங்க..!
-
உங்க சமையலில் உப்பு, புளி, மிளகாய் சேராமல் எந்த உணவும்
இருக்காது..!
-
உங்களுக்கு வந்த அன்பளிப்புப் பொருட்களில், பால்குக்கரும், அஜந்தா
கடிகாரமும் நிச்சயம் இடம் பிடிச்சிருக்கும்..!
பேரு வந்ததை அடுத்தவங்க தலையில் [அன்பளிப்பாதான்]
திட்டம் போட்டுகிட்டு இருப்பாங்க..!
-
வெளிநாட்டுக்குப் போயிட்டு வந்தீங்கன்னா, ஒரு சைஸ்
சூட்கேஸோடதான் ஊருக்குத் திரும்புவீங்க..!
-
எந்த நிகழ்ச்சிக்குப் போனாலும் 1 மணி நேரம் தாமதமாப் போவீங்க.
அதுதான் சரியா இருக்கும்ன்னு மனசார நம்புவீங்க...!
-
மளிகைப் பொருட்களின் பாலிதீன் உறைகளை
பத்திரமா வைப்பீங்க..
பின்னாடி உதவும்ங்கற தொலைநோக்குப்பார்வையோடு...!
-
உங்களுக்கு வரும் கடிதங்களில் எல்லா ஸ்டாம்பிலும் சீல்
பார்ப்பீங்க.
சீல் விழாம இருந்தா, அந்த கவனமா பிரிச்சு எடுத்து எங்கேயாவது
வச்சுட்டு,
அப்புறம் சுத்தமா மறந்துடுவீங்க.
-
சினிமா தியேட்டரோ,விரைவுப் பேருந்தோ..இருபக்க கை வைக்கும்
இடத்துக்கும் சொந்தம் கொண்டாடுவீங்க..!
-
ரெட்டைப் பிள்ளைகள் இருந்தா, ஒரே மாதிரிட்ரெஸ் தச்சுக்
கொடுப்பீங்க. ரைமிங்கா பேர் வைப்பீங்க..
[ரமேஷ், மகேஷ்.அமிர்தா,சுகிர்தா..]
-
ஏ.சி.திரையரங்குன்னா முட்டை போண்டா எடுத்துட்டுப் போய்
நாறடிப்பீங்க..
ஏ.சி.கோச்சுன்னா,கருவாட்டுக் குழம்பை கீழே ஊற்றி
கப்படிக்கவைப்பீங்க.!
-
விமானமோ,ரயிலோ, பஸ்ஸோ... ஒரு கும்பல் வந்து
ஏத்திவிடணும்ன்னு எதிர்பார்ப்பீங்க....!
-
புதுசா கார் வாங்கினா, அதுக்கு
மணப்பெண்அலங்காரம் பண்ணிதான்
எடுத்துட்டு வருவீங்க.!கொஞ்ச நாளைக்கு சீட்.பேப்பரைக் கிழிக்கவே
மாட்டீங்க..
நம்பர் எழுதறீங்களோஇல்லையோ.. கொலைகார முனிதுணைன்னு
ஸ்டிக்கர் ஒட்டமறக்கவே மாட்டீங்க...!
-
செல் போனோ, டி.வி.ரிமோட்டோ.. லாமினேஷன் செஞ்சாதான்
உங்களுக்கு நிம்மதி..!
-
அடுத்தபிள்ளைகளைப்
பாரு.. எவ்வளவு சாமர்த்தியமா
இருக்காங்கன்னு.. என்று உங்க பெற்றோர் சொல்லாம
இருக்கவேமாட்டாங்க.. அடுத்த
பெற்றோரைப் பாருங்க..எவ்வளவு ஜாலியா செலவழிக்கறாங்கன்னு
நீங்க நெனைப்பீங்க..ஆனா சொல்ல மாட்டீங்க..!
-
உங்க வீட்டு ஃபிரிட்ஜ்ல, சின்னச் சின்னக் கிண்ணங்களில், 3 மாசமா
தயாரிச்ச குழம்பு, கறி வகையறா இருக்கும்..!
-
உங்க சமையலறை அலமாரியில் காப்பித்தூளுக்கு இலவசமா வந்த பெட் ஜாடி
குறைஞ்சது ரெண்டு மூணு இருக்கும்..!
-
அதிகமா உபயோகிக்கப்படாத பொருள் உங்ககிட்ட அவசியம் நாலைஞ்சு
இருக்கும். [உ-ம்.பிரஷர். குக்கர்,காப்பி மேக்கர்,வாக்குவம்
கிளீனர்,பிரெட் டோஸ்ட்டர், மைக்ரோ வேவ்
அவன்,கேஸ் அடுப்புல க்ரில் இப்படி..]
-
பொங்கல், தீபாவளின்னாவீட்டுல சந்தோஷமா விழுந்து கெடக்க மாட்டீங்க..
தண்ணியைப்
போட்டுட்டு,தகராறுபண்ணி,போலீஸ்-ஸ்டேஷன்ல குத்தவச்சுருப்பீங்க..!
-
கல்யாணத்துக்கு ஊர் பூரா பத்திரிகை வச்சு கலெக்ஷன் பார்ப்பீங்க..
-
இந்த விவரம் உங்களுக்கு ரொம்பப் பிடிச்சிருக்கும்...