அடிகளின் முதலெழுத்துக்கள் மாத்திரை அளவொத்து இருக்க இரண்டாமெழுத்து ஒத்து வருவது எதுகை என்று அறிந்தோம்.
இனி, சில எதுகை வகைகளை எடுத்துக்காட்டுக்களுடன் பார்ப்போம் :
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.
- இது ஒரே எழுத்து (ற்) அடி எதுகையாக வந்துள்ளது.
தக்கார் தகவில ரென்ப தவரவர்
எச்சத்தாற் காணப் படும்.
- இது வல்லின வருக்க எதுகை.
அன்பீனும் ஆர்வம் உடைமை அதிவீனும்
நண்பென்னும் நாடாச் சிறப்பு.
- இது மெல்லின எதுகை.
எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யாவிளக்கே விளக்கு.
- இது இடையின எதுகை.
நாடாது நட்டலில் கேடில்லை நட்டபின்
வீடில்லை நட்பாள் பவர்க்கு.
- இது இன எதுகை ( இங்கு டகர வரிசை எதுகையாக வந்துள்ளது)
ஆவா வென்றே அஞ்சினர் ஆழ்ந்தார் - ஒருசாரார்
கூகூவென்றே கூவிளி கொண்டார் - ஒருசாரார்
இதில் இரண்டாம் எழுத்து ஒன்றவில்லை. எனினும், அதன்மேல் ஏறிய நெடில் ஒப்புமையால் நெடிலெதுகை ஆயிற்று.
மற்றும் சில எதுகைகள் உளவாயினும், அவை அத்துணைச் சிறப்புடையன வன்று. அவற்றை அவ்வப்போது பின்னர் தெரிந்து கொள்ளலாம்.
அடுத்து, இயைபு, முரண் தொடையோடு முடித்துக் கொண்டு பாடல் எழுதப் பயில இருக்கிறோம்.
tamilparks
@
gmail . com
என்ற முகவரிக்கு
அனுப்பி வையுங்கள்
வளரும்.......
நன்றி
தமிழநம்பி