ஈரசைச் சீர், இயற்சீர் என்றழைக்கப்படும் என்பதை முன்பே அறிந்துள்ளோம். ஈரசைச் சீர்களை உரிச்சீர் என்றும் கூறுவர்.
ஈரசைச் சீர்கள் தேமா, புளிமா, கருவிளம், கூவிளம் ஆகியவை என்று முன்பே அறிவோம்.
தளை கொள்ளும் போது, நின்றசீர் என்னசீர் என்று பார்க்க வேண்டும். வரும் சீர் இன்ன சீர் என்று பார்க்க வேண்டியதில்லை. ஆனால், வரும் சீரின் முதலசை நேரசையா நிரையசையா என்று பார்க்க வேண்டும்.
1.
நேர் ஒன்று ஆசிரியத்தளை
மாச் சீர் முன் நேர் வருவது நேர் ஒன்று ஆசிரியத் தளை.
கல்விXகற்க ( கல்வி–நின்ற சீர்; கற்க–வரும் சீர்)
கல்வி என்பது நேர்நேர் - தேமாச் சீராகும்.
கற்க என்பதில் கற்–நேரசையாகும்.
மாச் சீர் முன் நேர் அசை வந்துள்ளது. இதை மா முன் நேர் என்போம். மா முன் நேர் வருவது நேர் ஒன்று ஆசிரியத் தளை ஆகும்.
(புரியவில்லையானால் மீண்டும் ஒருமுறை படிக்க!)
2.
நிரை ஒன்று ஆசிரியத்தளை
விளம் முன் நிரை வருவது நிரை ஒன்று ஆசிரியத் தளையாகும்.
செந்தமிழ்Xமொழியே
செந்தமிழ்–கருவிளம் ; மொழியே–முதலசை நிரை)
இதில் விளம் முன் நிரை வந்துள்ளது.
விளம் முன் நிரை வருவது நிரை ஒன்று ஆசிரியத் தளையாகும்.
புரிந்ததா? ஐயமிருப்பின் கேளுங்கள். அடுத்து, மற்ற தளைகளைப் பயில்வோம்.
இந்த வலைத்தளம் பற்றிய
உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள்
கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட
உதவியாக இருக்கும்.
நன்றி.
உங்கள் எண்ணங்களை இங்கே பதிந்துகொள்ளுங்கள்
விரைவில்.