New World Computer Tips & Tricks
பொன்மொழி
பொது அறிவு
பாப்பா பாடல்கள்
தொடர்புக்கு
தமிழ் தோட்டம் ஆரம்பித்த நாள்
01-03-2006
புதிப்பிக்கப்பட்ட நாள்
August 07, 2010
உங்கள் பார்வை எண்
மரபுப் பா பயிலரங்கம்
கற்று தரும் ஆசிரியர்- தமிழநம்பி
.........................................................................................................................................................................................
16. வெண்டாழிசை – 3.
நாம் அடுத்து இன்னொருவகை வெண்தாழிசைப் பாடல் எழுத இருக்கின்றோம். இவ்வகையும் மூன்றடிப் பாடலே. இவ்வகைத் தாழிசையில்... முதல் இரண்டு அடிகள் நான்கு சீர்களாகவும் மூன்றாம் அடி முச்சீராகவும் இருக்கும். மூன்றாம் அடியின் ஈற்றுச்சீர் (பாடலின் இறுதிச் சீர்) தவிர மற்றவை கருவிள(நிரைநிரை)ச் சீர்கள். மூன்றடிகளிலும் ஓரெதுகை அமைய வேண்டும். ஈற்றுச் சீர் ஓரசைச் சீராக ‘நாள்’ அல்லது ‘காசு’ என்ற வாய்பாட்டால் முடியவேண்டும். எடுத்துக்காட்டு : இனியநம் தமிழ்மொழி எழில்கெட விடுவதோ இனிவிழித் திருந்துநாம் இழிவினை அகற்றிட அணிவகுத் தெழுந்திடு வோம். இப்பாடலை எழுதியவர் நெய்வேலி ப.வனிதா. இன்னொரு எடுத்துக்காட்டு: தனக்கென வதிந்திடும் தமிழின இரண்டகர் இனத்தினை அழித்திட எவர்க்குமே துணைசெலல் சினமுறச் செயுஞ்செய லாம். நீங்கள் விரும்பும் கருத்தமைய இவ்வகைத் தாழிசைப் பாடலை எழுதுக. எளிய முயற்சியுடன் எழுதலாம்; மிகுந்த மகிழ்ச்சி தரும். tamilparks @ gmail . com என்ற முகவரிக்கு அனுப்பி வையுங்கள் வளரும்....... நன்றி தமிழநம்பி
நாம் அடுத்து இன்னொருவகை வெண்தாழிசைப் பாடல் எழுத இருக்கின்றோம்.
இவ்வகையும் மூன்றடிப் பாடலே.
இவ்வகைத் தாழிசையில்...
எடுத்துக்காட்டு :
இனியநம் தமிழ்மொழி எழில்கெட விடுவதோ
இனிவிழித் திருந்துநாம் இழிவினை அகற்றிட
அணிவகுத் தெழுந்திடு வோம்.
இப்பாடலை எழுதியவர் நெய்வேலி ப.வனிதா.
இன்னொரு எடுத்துக்காட்டு:
தனக்கென வதிந்திடும் தமிழின இரண்டகர்
இனத்தினை அழித்திட எவர்க்குமே துணைசெலல்
சினமுறச் செயுஞ்செய லாம்.
நீங்கள் விரும்பும் கருத்தமைய இவ்வகைத் தாழிசைப் பாடலை
எழுதுக. எளிய முயற்சியுடன் எழுதலாம்; மிகுந்த மகிழ்ச்சி தரும்.
tamilparks
@
gmail . com
என்ற முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
வளரும்.......
நன்றி தமிழநம்பி
பயிற்சி குறித்து எழும் ஐயங்களை கீழ் உள்ள மின் அஞ்சலுக்கு எழுதி அனுப்பி வையுங்கள்
New World
அஞ்சல் மூலம் அனுப்ப விரும்புபவர்கள் இங்கு சுட்டவும்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும். நன்றி.
[Fun World] [About India] [New World]
[Mobile Park] [Collections4U] [more]